பஸில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டாரா? பராமரிப்பு பணிகளுக்காக நின்ற விமானமே வெளியேறியது...
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை.
என கூறியிருக்கும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையினர் இரத்மலானை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக
நிறுத்தப்பட்டிருந்த விமானம் பணிகள் நிறைவடைந்தவுடன் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறியிருக்கின்றது.
மேலும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தப்பி சென்றதாக கூறப்படும் கருத்தை விமான நிலைய அதிகாரசபை மறுத்துள்ளது.