SuperTopAds

அரசுக்கு எதிராக 24 மணித்தியால உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிராக 24 மணித்தியால உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்பிக்க பிரசாத் காலி முகத்திடலில் இன்று காலை தொடக்கம் 24 மணித்தியால உணவு தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கும் நீதி வழங்குமாறு 

 நாட்டின் தலைவர்களுக்கு வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து 

கொச்சிக்கடை தேவாலயத்திற்கு எதிர்ப்பு பேரணி ஒன்றையும் அவர் ஏற்பாடு செய்தார்.