வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை..! யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும், வளிமண்டலவியல் திணைக்களம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை..! யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும், வளிமண்டலவியல் திணைக்களம்...

வடமாகாணம், மற்றும் வடமத்தி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய, இன்று(15) கோவிலன் முனை, மல்லாகம் மற்றும் மலங்காடு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு