நாட்டு மக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு..!
நாட்டு மக்களுக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் சுமார் 8500 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு கிடைக்கும் என தொிவித்துள்ள குறித்த நிறுவனம்,
அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக
இந்த எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18-ம் திகதி முதல் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.