SuperTopAds

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்துகொண்டு தனது ஆதரவை தொிவித்த பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம்..!

ஆசிரியர் - Editor I
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்துகொண்டு தனது ஆதரவை தொிவித்த பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம்..!

ஆட்சியாளர்கள் வீட்டுக்கு போகவேண்டும் எனக்கோரி கொழும்பு - காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு தனது ஆதவை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசேட விசாரணை பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றார். 

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் சுரங்கங்களில் பணியாற்றி ஏனும் வாழ்வதாக அந்த பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.

அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர், அவர்களுக்கும் போராட்டக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.' உங்கள் ஒவ்வொரு பெட்டன் பொல்லுத் தாக்குதலும், 

ஒவ்வொரு கண்ணீர்ப் புகைக் குண்டும் இந்த பிள்ளைகளைத் தாக்காது. அது உங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையுமே சென்றடையும்.' என இதன்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி தெரிவித்தார். இவ்வாறான நிலையில், 

தன் மனச்சாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த பொலிஸ் சார்ஜன் தற்போது, பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான வட்டாரங்கள் தகவலளித்தன.