பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள அதிரடி தீர்மானம் முடிவுக்கு வருகிறதா? அரசுக்கு எதிரான போராட்டங்கள்..
கொழும்பு காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் இளைஞர், யுவதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இளைஞர் யுவதிகளுக்கான குறித்த அறிவிப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்க அழைப்பாக விடுத்துள்ளார்.
நாட்டில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசுக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையிலேயே இளைஞர், யுவதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.