எரிபொருளை பதுக்கிவைத்தால் அனுமதிப் பத்திரம் இரத்து..! ஒருவர் அனுமதி பத்திரத்தை இழந்தார், அரசாங்கம் எச்சரிக்கை..
எரிபொருட்களை பதுக்கிவைத்தால் எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதி இரத்துச் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில்,
4 கொள்கலன் டீசல் மற்றும் பெற்றோலை பதுக்கிவைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஜாஎல பகுதியில் உள்ள பமுனுகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் 5 நாட்களாக எரிபொருளை மறைத்துவைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் அனுமதி பத்திரம் இல்லாமல் எரிபொருள் விற்பனை செய்தால்
கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதுவரை நாட்டில் 68 பேர் கைது செய்யப்பட்டள்ளதுடன்,
8025 லீற்றர் டீசல் மற்றும் 726 லீற்றர் பெற்றோல் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.