ஜனாதிபதி செயலகம் தொடர் முற்றுகையில்..! நள்ளிரவு தாண்டி 3வது நாளிலும் நீடிக்கிறது அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம், கூடாரங்களும் அமைப்பு...
நாட்டில் உருவாகியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்புகூறும் வகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரும் கவனயீர்ப்பு போராட்டம் நள்ளிரவு தாண்டி 3வது நாளாகவும் நீடித்துள்ளது.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் நலன் கருதி ஆங்காங்கே தங்குமிட கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சமையல் மற்றும் மலசலகூட வசதிகளும் மருத்துவ வசதிகளும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.
நள்ளிரவு தாண்டியும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு நிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.