எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற இருவர் உயிரிழப்பு..!
தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ பகுதிகளில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 47 வயது மற்றும் 51 வயதான இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.இவ்வாறு இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதியே மாரடைப்பால் உயிரிழந்தார். இதேவேளை, வென்னபுவ பகுதியில்
எரிபொருள் கொள்வனவு செய்ய வரிசையில் நின்ற 51 வயதுடைய மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.