நாட்டு மக்களுக்கு பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! இணையதளங்கள், தொலைபேசி வழியாக மக்களிடம் பணம் கறக்கும் கும்பல்..
நாடு முழுவதும் தொலைபேசி வழியாக மக்களை ஏமாற்றும் கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் ஊடக பிரிவு பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு எச்சரித்துள்ளது.
இணையதளங்கள் மற்றும் தொலைபேசி வழியாக தொடர்புகொள்ளும் மோசடி பேர்வழிகள் புத்தாண்டு பொதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி இவ்வாறு மோசடியில் ஈடுபடிவதற்கு தயாராகி வரிவதாக தகவல் கிடைத்துள்ளதெனவும் கூறியுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண நாட்டு மக்களுக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் இவ்வாறான மோசடி பேர்வழிகள் மக்களிடமிருந்து பணம் கறக்க தயாராவது தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.