சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு..! 18ம் திகதி நிதியமைச்சர் தலைமையில் துாதுக்குழு அமொிக்கா பயணம்..
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக செய்யப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கையின் துாதுகுழு எதிர்வரும் 18ம் திகதி அமொிக்காவுக்கு பயணிக்கவுள்ளது.
நிதி அமைச்சர் அலி சப்றி தலைமையிலான தூதுக் குழுவே இவ்வாறு அமரிக்காவின் வொசிங்டன் நகரை நோக்கி பயணிக்கவுள்ள நிலையில், அந்த தூதுக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,
நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். குறித்த தூதுக் குழு, வொசிங்டன் நகரில் 5 நாட்கள் தங்கியிருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.