கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம்..! பெருமளவு இளையோர் பங்கேற்பு, பாதுகாப்பு உச்சம்..
நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி பதவி விலகவேண்டும். எனக்கோரி கொழும்பு - காலி முகத்திடலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் நாட்டின் தேசியக்கொடியுடன் தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். மேலும், அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட கதாகைகளையும் ஏந்தியுள்ளனர்.
அத்தோடு, தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் பங்கேற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.