SuperTopAds

தம்பியை எதற்காக வேறு பாடசாலையில் சேர்த்தீர்கள்..? இரு மாணவிகளை பாடசாலையை விட்டு விலக்கிய அதிபர், யாழ்.அச்சுவேலியில் பிரபல பாடசாலையில்...

ஆசிரியர் - Editor I
தம்பியை எதற்காக வேறு பாடசாலையில் சேர்த்தீர்கள்..? இரு மாணவிகளை பாடசாலையை விட்டு விலக்கிய அதிபர், யாழ்.அச்சுவேலியில் பிரபல பாடசாலையில்...

தம்பியை எதற்காக நீங்கள் படிக்கும் பாடசாலையில் சேர்க்கவில்லை. என கேள்வி எழுப்பிய பாடசாலை அதிபர், சகோதரிகளான இரு மாணவிகளை பாடசாலையை விட்டு விலக்கிய சம்பவம் யாழ்.அச்சுவேலி மகாஜனா இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான பாதிக்கப்பட்ட தரப்பினர் தகவல் தருகையில், இரு பெண் பிள்ளைகள் குறித்த பாடசாலையில் தரம் 9 மற்றும் தரம் 10 ல் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் குறித்த மாணவிகளின் தம்பியை அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் அனுமதித்த நிலையில் இதனை அறிந்த அச்சுவேலி மகாஜனா அதிபர் குறித்த மாணவிகளை அழைத்து தம்பியை எதற்காக சேர்க்கவில்லை?

என கேள்வி எழுப்பியதுடன் குறித்த மாணவிகளின் தாயரை அழைத்து மாணவிகளையும் அழைத்துக் கொண்டு செல்லுமாறு கடும் தொனியில் கூறியதும் அவர்களுடைய தம்பி படிக்கும் பாடசாலையில் சேர்க்குமாறும் கூறியிருக்கின்றார். 

இந்நிலையில் குறித்த மாணவிகளை அங்கேயே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு தாயார் மன்றாடியபோதும் அதிபர் அதனை உதாசீனம் செய்துள்ளார். 

குறித்த மாணவிகளில் தந்தை ஒரு கூலித் தொழிலாளியாகவுள்ள நிலையில் மாணவிகளை பரீட்சை முடிவுற்றதும் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். 

குறித்த பாடசாலை அதிபரின் செயற்பாடு மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் செயலாகும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதுடன், இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என கேட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் எமது இணையதளத்தில் தொடர்ந்து பிரசுரிக்கப்படும்.