SuperTopAds

மக்களை காப்பாற்றுவதற்கு ஒத்துழையுங்கள்! நாடாளுமன்றில் எதிர்கட்சிகளிடம் அலி சப்ரி மன்றாட்டம்...

ஆசிரியர் - Editor I
மக்களை காப்பாற்றுவதற்கு ஒத்துழையுங்கள்! நாடாளுமன்றில் எதிர்கட்சிகளிடம் அலி சப்ரி மன்றாட்டம்...

மக்களுக்கு எதிர்ப்பு தொிவிக்கும் உரிமையுள்ளது. வழக்கறிஞராக நானும் அதனை கூறுகிறேன். என கூறியிருக்கும் அலிசப்ரி, ஹர்ஷ டி சில்வா எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், நாம் அவருக்கு ஆதரவளிப்போம். எனவும் கூறியுள்ளார். 

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். 

மக்கள் சந்திக்கும் கஷ்டங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் மீள்வது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். 

தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்கவேண்டும்.