SuperTopAds

அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி..! ஆலோசனை குழுவை நியமனம் செய்தார்...

ஆசிரியர் - Editor I
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி..! ஆலோசனை குழுவை நியமனம் செய்தார்...

கடன் நிலைபேற்றுத் தன்மை மற்றும் பல்தரப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசனை குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நியமனம் செய்துள்ளார். 

01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கிளிநொச்சி விஜயம்

02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன்.

03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷார்மினி குரே,இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள். 

ஜனாதிபதியைச் சந்தித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்கள் ஆகும்.