ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்குவதில் சிக்கல் இல்லையாம்! மே மாத சம்பளம்...?
தற்போது நாடு சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்குவதில் எந்தவொரு தடையும் இல்லையென தொிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எனவே, வழமைபோல எவ்வித மாற்றமும் இன்றி இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.