பாடசாலை நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு! பாடசாலை நாட்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு...
நாடு முழுவதும் பாடசாலை நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நேர அதிகரிப்பானது ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் அடுத்த தவணையிலிருந்து ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இவ்வருட கல்வி நடவடிக்கைகளுக்கு நேரமின்மை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
நாளாந்த பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டதன் மூலம் ஒரு பாடசாலை தவணை நாள்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.