இலக்க தகடுகளற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்த இராணுவத்தினர் - பொலிஸார் இடையில் முறுகல்/தாக்குதல்..! உடனடி விசாரணைக்கு பணிப்பு, சிக்கலில் பொலிஸார்..
நாடாளுமன்றத்திற்கு வெளியே இடம்பெற்ற போராட்டத்தின்போது அங்குவந்த இராணுவ விசேட படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினருடன் தகராறில் ஈடுபட்டதுடன், தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி
மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளின் பணிப்பாளரின் வழிகாட்டலின்பேரில்
இராணுவ விசேட படைப்பிரிவினர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் வீதி நுழைவாயிலை வந்தடைந்தது. இதன்போது, இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள்களில் இலக்கத்தகடு இல்லாததன் காரணமாக,
அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதல் சம்பவமாக மாறியிருந்தது.