நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..! ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் வன்முறையாளர்களாம்..
நாட்டில் இடம்பெறும் சில ஆர்ப்பாட்டங்களில் தீ வைப்பு சம்பவங்கள், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட வன்முறைகளில் சிலர் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார்,
இவ்வாறான செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காணொளி ஆதாரங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலர் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் யார் வேண்டுமானாலும் போராட்டத்தை நடத்தலாம் எனவும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கலவரம் அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.