SuperTopAds

அமைச்சு பதவியை இராஜினாமா செய்த அன்றே நாட்டைவிட்டு வெளியேறினார் நாமல்..!

ஆசிரியர் - Editor I
அமைச்சு பதவியை இராஜினாமா செய்த அன்றே நாட்டைவிட்டு வெளியேறினார் நாமல்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி தனது அமைச்சுப் பொறுப்புக்களை இராஜினாமா செய்துள்ள நாமல் ராஜபக்ஸ அன்றைய தினமே டுபாய்க்கு பயணமானதாகவும், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 2ம் திகதி மாலைதீவு பயணமானதாகவும், 

இந்நிலையில் டுபாயிலிருந்து அவர்கள் மேற்குலக நாடு ஒன்றுக்கு செல்வார்கள் எனவும் குறித்த ஆங்கில ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.