SuperTopAds

ஜனாதிபதி செயலகம் முற்றுகைக்குள்..! இராணுவம் குவிக்கப்பட்டு அதியுச்ச பாதுகாப்பு, நீடிக்கும் கடும் பதற்றம்...

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி செயலகம் முற்றுகைக்குள்..! இராணுவம் குவிக்கப்பட்டு அதியுச்ச பாதுகாப்பு, நீடிக்கும் கடும் பதற்றம்...

ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் நள்ளிரவு தாண்டியும் முற்றுகையிட்டிருக்கும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் அதிகரித்துக் கொண்டிருப்பதாக கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன. 

நேற்று மாலை தொடக்கம் அரசுக்கு எதிர்ப்பு தொிவித்து சுதந்திர சதுக்கத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக ஜனாதிபதி பதவி விலகவேண்டும். 

என கோஷமிடுவதுடன், தீ பந்தங்கள் மற்றும் அரசுக்கு எதிரான பாடல்களை இசைத்தபடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் கூட கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுதாக கூறப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தை சூழ இராணுவ அதிரடிப்படையினர் உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், 

விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.