தங்காலையில் பிரதமர் மஹிந்த வீடு முற்றுகைக்குள்..! பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு, நீர்த்தாரை பிரயோகம், தொடரும் பதற்றம்..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தங்காலை வீட்டினை மக்கள் முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் தங்காலையில் உள்ள வீட்டினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இன்று நண்பகல் தொடக்கம் பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தடைகளை மீறிய நிலையில் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது.