அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா..! பிரதமர் மஹிந்த தொடர்வார்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தவிர்ந்த மற்றய அனைத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்.
மேற்படி தகவலை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதேவேளை புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என கூறப்படுகிறது.