சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் உருவாகும் வாய்ப்பு...! பஸில் பதவி இழப்பார் எனவும் தகவல்..
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைக்கப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் காபந்து அமைச்சரவைக்கான யோசனையை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இந்த சந்திப்பின் பின்னரே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை புதிய காபந்து அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.