சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது! பிசு..பிசுத்துப்போன முயற்சி...
நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் குழப்பங்களினால் நேற்று நள்ளிரவு முதல் விதிக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச அமைப்புக்கள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் தடை நீக்கப்பட்டுள்ளது.