SuperTopAds

சமூக வலைத்தளங்களை முடக்கியமையினை ஏற்றுக்கொள்ள முடியாது! அது பயனற்ற ஒன்றாகும், நாமல் சாடல்...

ஆசிரியர் - Editor I
சமூக வலைத்தளங்களை முடக்கியமையினை ஏற்றுக்கொள்ள முடியாது! அது பயனற்ற ஒன்றாகும், நாமல் சாடல்...

நாட்டில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தான் VPN ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும், இதே முறைமையை பலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக சமூக வலைத்தளங்களை முடக்கியது பயனற்ற செயற்பாடாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இது குறித்து அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டுமெனவும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.