SuperTopAds

உச்ச பாதுகாப்பில் நாட்டின் பல பகுதிகள், முப்படையினரும் குவிப்பு..! நேற்றும் பல இடங்களில் மக்கள் பாரிய போராட்டம்...

ஆசிரியர் - Editor I
உச்ச பாதுகாப்பில் நாட்டின் பல பகுதிகள், முப்படையினரும் குவிப்பு..! நேற்றும் பல இடங்களில் மக்கள் பாரிய போராட்டம்...

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றய தினம் மாலையும் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தியுள்ள நிலையில் அங்கெல்லாம் பாதுகாப்பு மற்றும் காண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் மாலை மொறட்டுவ நகர முதல்வர் சமன் லால் பக்னானந்தோவின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை வரவழைக்கப்பட்டனர். 

இதேபோல் பேருவளை நகரில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. போராட்டம் காரணமாக கொழும்பு பிரதான வீதியில் ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 

குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மற்றும் அருகிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லம் வரை போராட்டம் சென்றடைவதாக வெளியான தகவலையடுத்து மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 

தடுப்பு கம்பங்களும் வைக்கப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொழும்பின் பல பகுதிகளில் இணைய சேவைகள் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.