ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்படுகிறது..! மேலும் இரு பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டம்..
மீரிஹானவில் ஜனாதிபதி இல்லம் முற்றுகைப் போராட்டம் நள்ளிரவு தாண்டியும் நீடித்த நிலையில் மேலும் இரு பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி களனி மற்றும் மவுண்ட்லவேனியா பொலிஸ் பிரிவுகளுக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது,
இதேவேளை ஏற்கனவே 4 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.