நாடு முழுவதும் 31 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க அமைச்சரவை ஒப்புதல்..!
நாடு முழுவதும் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியிருக்கின்றார்.
ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு
இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.