SuperTopAds

கொவிட்-19 தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள இடங்கள்..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்..

ஆசிரியர் - Editor I
கொவிட்-19 தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள இடங்கள்..! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்..

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும். என சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. 

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், 

எதிர்காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த இடங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கொவிட் தடுப்புக்கான தொழில்நுட்பக் குழு கொவிட் தடுப்பூசி அட்டையை எங்கு கட்டாயமாக்குவது என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு நுழையும்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக தடுப்பூசி அட்டையை சமர்பிப்பது கட்டாயமாகும் எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.