இன்றைய நாள் எப்படி 07/05/2018
மேஷம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். நீண்ட காலக் கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.
ரிஷபம்: நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். பெறறோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
மிதுனம்: வழக்கத்திற்கு மாறான திடீர் பணி குறுக்கிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மூலதனம் அதிகம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர்.
கடகம்: புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
சிம்மம்: பேச்சு, செயலில் நேர்மையைப் பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் விற்பனை உயர்வால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவர்.
கன்னி: சிலர் உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை மீறி நடப்பர். பொறுமை காப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சிபெற விடாமுயற்சி தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். பயணத்தில் கூடுதல் கவனம் வேண்டும்.
துலாம்: கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை பெற யோகம் உண்டு.
விருச்சிகம்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.
தனுசு: குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்களுக்கு விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வரும்.
மகரம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
கும்பம்: சொந்தப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற்ற தாமதமாகும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். உடல்நிலை திருப்தியளிக்கும்
மீனம்: யாருக்கும் தகுதி மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு கடன் பெற நேரிடலாம். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.