பெண் துணை இயக்குனருக்கு ஹோட்டல் அறையில் நடந்தேறிய அவலம்…!
நானும் எங்கள் குழுவும் பலவிதமான திகைப்பூட்டும் இடங்களை தேடி, தேடி ஷூட்டிங் செய்து வந்தோம். எங்கள் பயணம், நாங்கள் கண்ட காட்சிகள், யாரும் கேட்டிராத கதைகளை கூற வேண்டும் என்ற ஆர்வம் ஒரு ரம்மியமான பயணமாக இருந்தது.
அதுதான் எங்கள் ஷூட்டிங்கின் கடைசி நாள் அன்று, எதிர்பார்த்தை காட்டிலும் சீக்கிரமாக எங்கள் கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். அனைவரும் ஹோட்டலுக்கு திரும்பினோம்.
நாங்கள் ஹோட்டலை அடைத்த போது இரவு எட்டு மணி இருக்கும்.
அங்கு எனது அறையில் நான் குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென யாரோ என்னை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற எண்ணம்… இரவு நேரம் என்பதால் இப்படியான பயம் இருக்க தான் செய்யும் என்று கருதி வேகமாக குளித்து முடித்து டவலை கொண்டு உடலை துடைத்துக் கொண்டிருக்கும் போது.
சீலிங் கீழே இருந்த ஒரு சிறிய ஜன்னல் போன்ற துவாரத்தின் வழியே யாரோ நான் குளிப்பதை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன்.
அந்த கண்கள், நான் பார்த்தது இரண்டு கண்களை மட்டும் தான். ஒரு கையால் அந்த ஜன்னல் துவார பகுதியை இறுக்க பிடித்துக் கொண்டு அந்த நபர் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே டவலை கட்டிக் கொண்டு படுக்கையறைக்கு விரைந்தேன். என்னுள் அதிர்ச்சி நீங்கவே இல்லை. என் கண்கள் மற்றும் உடலில் நடுக்கும் நிற்கவே இல்லை. அந்த நபர் எத்தனை நேரம் நான் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்? அவன் நான் குளிப்பதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்திருப்பானா? (இந்த டிஜிட்டல் யுகத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது) என அச்சம் தொற்றி கொண்டது.
என்னுடன் அறையில் தங்கியிருந்த பெண்ணை அழைத்து நடந்ததை கூறினேன். என் உடல் முழுவதும் வியர்வை ஊற்றாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது.
ஒருமாதிரியான அருவருப்பான அசௌகரியத்திற்கு ஆளானேன். அவன் கேமராவில் படம் பிடித்திருப்பானா? மொபைலில் படம் பிடித்திருப்பான என பல சந்தேகங்கள். என் உடல் எப்படி பதிவாகியிருக்கும், ஏதேனும் இணையங்களில் அதை பதிவிட்டுருப்பார்களா? என்ற அச்சம் என்னைவிட்டு அகலவே இல்லை என பெரிதும் கலங்கியிருந்தார்.