நாட்டில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதா? அப்படி ஒன்றுமில்லை, சில இடங்களில் மட்டும் நடந்துள்ளது என்கிறது பொலிஸ்..
நாட்டின் தற்போதைய நிலையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. என பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்புவதாக,
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சிறப்பு அங்காடிகளையும், வீடுகளையும் உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸ் நடவடிக்கை எடுப்பதாக
பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.