நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு தொடரும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு...
நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
இதன்படி இன்று (19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.
அந்த வலயங்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.
அந்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.
இதேவேளை, P, Q, R, S, T, U, V, W வலயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்க்ளில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.