இன்றும் தொடரும் சுழற்சிமுறை மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..
இன்றும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடங்களும்,
மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலமும்,
மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.