SuperTopAds

காதலிக்கு தோடு வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்ற இளைஞன் 20 தோடுகளுடன் ஓட்டம்..! பின்னர் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
காதலிக்கு தோடு வாங்குவதற்காக நகைக்கடைக்கு சென்ற இளைஞன் 20 தோடுகளுடன் ஓட்டம்..! பின்னர் நடந்த சம்பவம்..

காதலிக்கு தோடு பரிசளிப்பதற்காக நகைக் கடையில் இருந்து 20 சோடி தோடுகளை திருடிக்கொண்டு தப்பி ஓடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்ற ஹொறணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் தனது காதலிக்கு தங்க தோடு ஒன்றை பரிசளிப்பதற்காக நகைக்கடைக்கு சென்றுள்ளார். இதன்போது நகைக்கடையில் 20 சோடி தோடுகள் உள்ள பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதனை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் பெட்டியை துாக்கிக் கொண்டு ஓடியுள்ளார். இதனை வீதியில் நின்று அவதானித்த பொதுமக்கள் சிலர் குறித்த நபரை துரத்தி பிடித்துள்ளனர். பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்

இளைஞனை கைது செய்த பொலிஸார் 18 சோடி தோடுகளை மீட்டிருக்கின்றனர். மிகுதி 2 தோடுகள் அவர் தப்பி ஓடும்போது விழுந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் குறித்த நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 

ராஜகிரியவில் உள்ள தனது காதலிக்கு பரிசாக காதணி ஒன்றை கொள்வனவு செய்ய கடைக்கு வந்ததாக தெரிவித்திருந்திருக்கின்றார். எனினும் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர் இவ்வாறு கூறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபருக்கு எதிராக கொள்ளைச் சம்பவங்கள் அல்லது திருட்டுச் சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் பாதுக்க பொலிஸாரால் 

இவர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.