SuperTopAds

நாடு முழுவதும் உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு..! சாப்பாட்டு பொதி 20 ரூபாவாலும், பாண் 20 தொடக்கம் 30 ரூபாவாலும் உயர்கிறது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு..! சாப்பாட்டு பொதி 20 ரூபாவாலும், பாண் 20 தொடக்கம் 30 ரூபாவாலும் உயர்கிறது..

நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். 

அதற்கமைய உணவுப் பொதி ஒன்றின் விலை இன்று முதல் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அச் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் கொத்துரொட்டி ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிப்பட்டுள்ளது.

இதேவேளை, பாண் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 

ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 

தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.