பாடசாலை மாணவனை 4 வருடங்கள் துஷ்பிரயோம் செய்த ஆசிரியை..! விசாரணைகளை ஆரம்பிக்க நீதிமன்றம் உத்தரவு, பிரபல பாடசாலை கணனி ஆசிரியையாம்..
பாடசாலை மாணவனாக இருந்தபோது இளைஞன் ஒருவனை 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாடசாலையொன்றின் கணினி ஆசிரியை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம இதற்கான உத்தரவை
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு பிறப்பித்தார். 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பது தொடர்பில்
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு அதிகாரிகள் நீதிமன்றிற்கு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து நீதிவான் இந்த விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்தார்.
பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இளைஞர் மாணவராக இருந்த போது சந்தேக நபரான ஆசிரியையை கிரிக்கெட் சமர் (பிட்மெச்) ஒன்றின் போது சந்தித்துள்ளார். அதன்பின்னர் அவரை ஏழு தடவைகள்
கல்கிஸ்சை பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்கு இந்த ஆசிரியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஸ்பிரயோக
தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.