போலி தங்க நகைகளை தயாரித்து 20 லட்சம் ரூபாய்க்கு விற்று மோசடி..! தேடப்பட்டுவந்த குற்றவாளி உட்பட இருவர் கைது..
போலி தங்க நகைகளை தயாரித்து அதனை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வறக்காபொல - வாரியகொட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் கூறியுள்ளதாவது,
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 731 கிராம் 240 மில்லிகிராம் தங்கக்கட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25, 38 வயதுடைய அலவ்வ மற்றும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதேபோன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சந்தேகநபர் ரம்புக்களை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலை உள்ளிட்ட 6 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும்
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக
பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.