இலங்கையில் மயில்கள் மூலம் பரவும் தோல் நோய் மற்றும் காய்ச்சல்..!
இலங்கையில் களுத்துறை மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் தோல் நோய் மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், குறிப்பிட்ட நோய் மயில்களில் இருந்து பரவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது.கடந்த மூன்று வருடங்களாக களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை
வேகமாக அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.இந்த மாவட்டங்களில் உள்ள விவசாய பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது இந்த தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.