SuperTopAds

நாட்டில் அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்த வர்த்தமானி அறிவிப்பு! இன்று நள்ளிரவு முதல் அமுல்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கான இறக்குமதியை கட்டுப்படுத்த வர்த்தமானி அறிவிப்பு! இன்று நள்ளிரவு முதல் அமுல்..

நாட்டில் இன்று இரவு நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வெளியிட்டிருக்கின்றார். 

பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட், அன்னாசி, மங்குஸ்தான் மற்றும் பழங்கள், ஒரஞ், அவகாடோ, மீன் பாஸ்தா, நூடுல்ஸ், இறைச்சிகள், முட்டை, ஆப்பிள், திராட்சை, பதப்படுத்தப்பட்ட பழங்கள் 

மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளது. என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே 

இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறுகிறது.