பாடசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி கோடரியால் அடித்து கொலை..! சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்..
பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளை - உடுவரை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மாணவியின் சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலி எல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.