கொரோனா மரணங்கள் தொடர்பில் புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயம்..!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஏழு நாட்களின் பின் நிகழும் மரணங்கள் காணிக்கப்படாது. என நேற்று (05) முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மரணங்களின் இறுதி கிரியைகளை தனிமைப்படுத்தல் விதிகளில் இன்றி சாதாரண முறையில் முன்னெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட்-19 மரணங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.