SuperTopAds

மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு அதிய வாய்ப்பு! வேறு வழியில்லை என்கிறது மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு அதிய வாய்ப்பு! வேறு வழியில்லை என்கிறது மின்சாரசபை..

நாடு தற்போதுள்ள நிலையில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவேண்டும். என இலங்கை மின்சாரசபை தொிவித்திருக்கின்றது. 

மின் கட்டணத்தை அதிகரிக்காமல் முன்னோக்கிச் செல்வது சவாலானது என்று இலங்கை மின்சார சபையின் நிறுவன மூலோபாயம் 

மற்றும் ஒழுங்குமுறை உறவுகளின் பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார். இதுவரையில் விலை அதிகரிப்புக்கு உட்படாத 

ஒரே சேவை மின்சாரம் என்று வீரரத்ன கூறியதுடன், தற்போதைய விலை நிர்ணயத்தை இனியும் பேண முடியாது என்றார்.

மழை இல்லாததால் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும், 

ஏப்ரல் மாதத்தில் ஒரு வல பகுதிகளில் லேசான மழை பெய்யுமெனவும் அவர் குறிப்பிட்டார்.