இன்றும், நாளையும் மின்வெட்டு..! நேர ஒழுங்குகள் குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு..
வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மின்வெட்டை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு வழங்கியுள்ளது.
இதன்படி இன்று (05) சனிக்கிழமை P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும்,
மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும்,
மாலை 4.30 தொடக்கம் 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை ஞாயிற்ற கிழமை (06) காலை 9.00 மணிமுதல் 4.30 மணிவரையான காலப்பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 2 மணி 30 நிமிடங்கள்
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.