வாய்த்தர்க்கம் முற்றியதில் அடித்துக் கொல்லப்பட்ட தாய்! இரு மகன்கள் படுகாயம்..
இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் முற்றியதில் தாய் அடித்து கொல்லப்பட்டுள்ளதுடன் மகன்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் குறித்த பெண் மற்றும் அவரது இரு புதல்வர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 46 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.