மின்வெட்டு நேரங்களில் திருடர்கள் கொண்டாட்டம்..! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..
நாடு முழவதும் கடந்த சில நாட்காக மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் நிலையில் மின்வெட்டு நேரத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்க காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் சில தினங்களுக்கு முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விகாராதிபதியின் அலுவலக அறையிலள்ள தங்க தாயத்து மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஹாரையில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அச்சந்தர்ப்பத்தில் மின்வெட்டு அமுலில் இருந்ததால் கெமராக்கள் செயலிழந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் மின்வெட்டு நேரங்களில் மிக அவதானமாக இருக்கவேண்டும. என பொலிஸார் அறிவித்திருக்கின்றனர்.