நாடு முழுவதும் 5ம் திகதிக்கு பின் மின்வெட்டு இருக்காதாம்..! மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதி..
நாடு முழுவதும் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் தடையற்ற மின்சார விநியோகம் நடைபெறும் என மின்சக்தி அமைச்சர் காமினி கொகுகே கூறியுள்ளார்.
தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய மூடப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக மேலதிக எரிபொருளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
அமைச்சர் தெரிவித்துள்ளார்.