ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வழங்கிய உத்தரவு..! முடிவுக்கு வருமா மின்வெட்டு...
நாட்டில் தற்போதுள்ள மின்வெட்டு நெருக்கடிக்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஊடாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.