பகலில் 5 மணித்தியாலம், இரவில் 2.30 மணித்தியாலம்..! இன்றைய மின்வெட்டு குறித்த மேலதிக விபரம்..
நாடு முழுவதும் இன்றைய தினம் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ள நிலையில் குறித்த மின்வெட்டு தொடர்பான மேலதிக விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை 5 மணித்தியாலங்கள் மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை 2.30 மணித்தியாலங்கள்
மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, E வலயத்துக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும் F வலயத்துக்கு பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மாலை 6 மணிமுதல் 8.30 மணிவரை E வலயத்துக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை F வலயத்துக்கும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேர மின்வெட்டும்,
P,Q,R,S வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணிவரை T,U,V,W வலயங்களுக்கும் இரவு 8.30 மணிமுதல் இரவு 11 மணிவரை P,Q,R,S வலயங்களுக்கும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.